செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள்…. தங்க நகைகள் மீட்டு அதிரடியாக கைது செய்த குமரி மாவட்ட போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் :- செயின் பறிப்பு சம்பவங்கள், திருட்டு சம்பவங்களை மாவட்டத்தில் நடக்காமல் இருக்கவும், ஏற்கனவே நடந்த நடந்த திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS இதற்காக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மூலச்சல் பகுதியை சேர்ந்த பிரபிலா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வந்த 2 நபர்கள் பிரபிலா கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றதாக தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதுபோன்று முக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த பிரமிளா என்ற பெண் கிராத்தூர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து பிரமிளா அணிந்திருந்த செயினை பறித்து சென்றார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது..
இந்நிலையில் தக்கலை காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கில் சம்பவத்தில் ஈடுபட்ட கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாஹீன் (21), பர்ஜாஸ்(20) என்பவரையும் நித்திரவிளை காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கு சம்பவத்தில் ஈடுபட்ட செய்யது அலி(23) ஆகிய 03 பேரையும் குமரி மாவட்ட போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகளை மீட்டனர்.
இவர்கள் நான்கு செயின் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. பின்னர் தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் நெப்போலியன் குற்றவாளிகள் மாஹீன் மற்றும் பர்ஜாஸ் ஆகியோரையும், நித்திரவிளை காவல் நிலையை காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் குற்றவாளி செய்யது அலி ஆகியோரை நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள் . கேரள மாநிலத்தை சேர்ந்த செயின் பறிப்பு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்…