பெண்ணின் புகைப்படத்தை வைத்து இணையத்தில் பதிவிடுவேன்  என  மிரட்டிய ஆல்பின் என்பவர் கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம்:-

புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியிடம் மொபைலில் வந்த தவறான அழைப்பின் மூலமாக  முள்ளுவிளை பகுதியை சேர்ந்த ஆல்பின் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு  காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் ஆல்பினின் நடவடிக்கை சரியாக இல்லாததால் அவரை விட்டு அந்த பெண் பிரிந்து சென்றுள்ளார். அப்பொழுது அவருடன் எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு   ஆபாச இணையத் தளங்களில்  பதிவிடுவதாக அந்த பெண்ணிடம் தொலைபேசி வாயிலாக கூறி மிரட்டியுள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணின் தங்கையிடமும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அந்த பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.  இதனால் பயந்துபோன அந்த பெண் Cyber Crime Reporting Portal மூலமாக  ஆன்லைனில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் மீது   விரைந்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஹரி கிரன் பிரசாத்  அவர்கள் சைபர்கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில்   சைபர் கிரைம் ஆய்வாளர்  வசந்தி  மற்றும் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்  அஜிமல் ஜெனிப் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆல்பின் அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து இணையத்தில் பதிவிடுவேன்  என  மிரட்டியது தெரிய வந்தது. பின்னர் அவரை சைபர் கிரைம் ஆய்வாளர்  வசந்தி  குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *