அண்ணா நகர் பகுதியில் 47.20 லட்சம் மதிப்பீட்டு இணைப்புக் கால்வாய் கட்டப்பட உள்ளது
புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் 47.20 லட்சம் மதிப்பீட்டு இணைப்புக் கால்வாய் கட்டப்பட உள்ளது. சுமார் 70 மீட்டர் தூரத்தில் கட்டப்படவுள்ள இந்த இணைப்பு கால்வாய்க்கு தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் விவிலியன் ரிச்சர்ட் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். உடன் T. அருண்,இ.ஆ.ப. செயலாளர், பொதுப்பணி துறை V.சத்தியமூர்த்தி, தலைமை பொறியாளர் A.பாஸ்கரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.