டாஸ்மாக் மேலாளர் தங்கி இருந்த அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….ரூபாய் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

Loading

 கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் பணிபுரிந்து வருகிறார். இவரது அறையின் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ளது. ஏற்கனவே மாவட்ட முழுவதும் உள்ள 113 மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று   இவருக்கு  லஞ்சம் கொடுக்கப்படுவதாக பல  குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் பல்வேறு புகார்களின் அடிப்படையில்  நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இவரது கண்காணிக்க தொடங்கினர் அவரது வாகன ஓட்டுனர் ரெஜினை போலீசார் விசாரித்ததில் ரெஜின் மூலமாக பணம் வாங்கிகொண்டிருப்பது தெரியவந்தது.
பின்பு அறையில் மேலாளர் விஜய் சண்முகம் அறையில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது சுமார் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு பட்டியலாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணங்களை சுருட்டி சுருட்டி வைத்துள்ளதாக  போலீசார் கூறப்டுகின்றனர் . விஜய சண்முகம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டையை  சேர்ந்தவர் என கூறப்படுகிறது
இவர் பணியில் சேர்ந்து இரண்டாமாதகாலம் தான் ஆகிறது  இது தொடர்பாக விஜய் சண்முகத்தின் டிரைவர் ரெஜின் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தீபாவளி நெருங்கி வரும்  நேரத்தில் இந்த சோதனை அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவம் இப்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது…
0Shares

Leave a Reply