சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Loading

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
பட்டாசு விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பீர் அனீஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
சென்னை தீவுத்திடலில் இந்த வருடம் முழுமையாக பசுமை பட்டாசு விற்பனைக்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட சில பட்டாசுகள் 25% விலை உயர்ந்துள்ளது. எம் ஆர் பி கிடையாது, எந்த கம்பெனி பொருளாக இருந்தாலும் ஒரே விலை தான் என்றார்.
மேலும், கடந்த ஆண்டுகளில் வெடிக்காத பட்டாசுகள் எல்லாம் இருந்தது என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்த முறை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பட்டாசு பெட்டிகளிலும் இங்கு விற்கப்படும் மொத்த விற்பனை விலை உள்ளது. தீவுத்திடலில் எந்த கடையில் வாங்கினாலும் ஒரே விலையில் தான் பட்டாசுகள் விற்கப்படும்.
சிவகாசியில் உள்ள முன்னணி நிறுவனங்கள் இங்கு ஸ்டால் அமைத்து உள்ளது. தீபாவளிக்கு முன் கூட்டியே வந்து பட்டாசுகளை வாங்குங்கள் அது உங்களுக்கும் சுலபம், விற்பனையாளர்களுக்கும் சுலபம். முன்கூட்டியே பட்டாசு வாங்க வருபவர்களுக்கு வரும் 21 ஆம் தேதி வரை எங்கள் விலையில் 25% தள்ளுபடி  இருக்கும்.கடைசி நேரத்தில் தள்ளுபடி இருக்காது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த வருடம் 30% தான் பட்டாசு உற்பத்தி உள்ளது. அதனால் 55 கடைகள் இருக்க வேண்டிய இடத்தில்
47 கடைகள் தான் போடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பட்டாசு வாங்காதீர்கள் தமிழக அரசும் அறிவுறுத்தி உள்ளது.பில் போடாமல் பட்டாசுகளை வாங்காதீர்கள் இந்த வருடம் விபத்தில்லாத தீபாவளி கொண்டாடலாம். பில் போட்டு வாங்கினால் யாரிடம் இருந்து வங்கப்பட்டுள்ளது என்று தெரியும்.
வரும் திங்கள் கிழமை 2 முதல் 3 மணிக்குள் தீவுத்திடலில் உள்ள பட்டாசு கடைகள் விற்பனையை  அமைச்சர்கள் சேகர் பாபு, மதி வேந்தன் உள்ளிட்டோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
கண்ணகானிப்பு கேமரா, உணவகங்கள், கார் பார்க்கிங் வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கிரெடிட் கார்டு உபயோகப்படுத்தலாம்
ஜி எஸ் டி இல்லாமல் எந்த பொருளும் தற்போது இல்லையே எல்லாரும் ஏற்றுக்கொண்டனர். பில் இல்லாமல் வாங்கினால் சீன பட்டாசு கூட வரலாம். விற்பனையாளர்கள் கட்டாயம் ஜி எஸ் டி உடன் தான் விற்பனை செய்வோம் என்றார்.
10 முதல் 20 பிராண்ட் கம்பெனிகள் வந்துள்ளது. ஆன்லைனில் அதன் விலைகளை நீங்கள் சரி பார்த்துக்கொள்ளலாம். அதை விட குறைவாக இங்கு இருக்கும்.
1000 வகையான புதுமையான பட்டாசுகள் குழந்தைகளுக்காக இந்த வருடம் வந்து உள்ளது .
தமிழ்நாட்டில் சீன பட்டாசு கிடையாது. அவர்களை நாங்கள் எப்படி விற்பனை செய்யவிடுவோம். கடைசி நேரத்தில் தெரு ஓரங்களில் விற்கப்படும் கடைகளில் வேண்டுமானால் தரமற்ற பட்டாசுகள் இருக்கலாம். கடைகளில் பில் போட்டு வாங்கும் பட்டாசுகள் தரமாக இருக்கும்
அரசு விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டால் பட்டாசு விற்பனைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *