உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்…
கண்பார்வை குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கண்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் அக்டோபர் 8ம் தேதி உலக கண்பார்வை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக கண் பார்வை தினத்தையொட்டி சேலத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணையானது, மாநகரின் பிரதான சாலைகள் வழியே சென்று மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில் தனியார் மருத்துவ கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்பார்வை குறைபாடுகள் குறித்தும், கண்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.