சென்னை திருவொற்றியூரில் உள்ள தணியார் திருமணமாளிகையில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக மகளிர்களுக்கு நல திட்ட உதவிகள்
![]()
சென்னை திருவொற்றியூரில் உள்ள தணியார் திருமணமாளிகையில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக மகளிர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினர்.
வடசென்னை கிழக்கு மாவட்டம் மகளிர் அணி பொதுச் செயலாளர் அமுதா மற்றும் முத்து செல்வி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மாநில மகளிர் அணித் தலைவர் உமாரதி வருகைதந்து மகளிர்களுக்கு தையல் இயந்திரம்,சேலைகள்,காப்பீடு அடையாள அட்டைகள் வழங்கினார்.
இதில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார்,மகளிர் அணி மாவட்ட தலைவர் ரபியா,மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ்,மாவட்ட துணை தலைவர் திருமுருகன்,கிழக்கு மண்டல தலைவர் எஸ்.கே.டி ரவி,மேற்கு மண்டல தலைவர் பாலு,வடக்கு மண்டல் தலைவர் கதிர்,மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் சோபனா,துணைத் தலைவர் சொர்ணலதா,மாவட்ட செயலாளர் சுகன்யா,மாவட்ட பொருளாளர் சத்யா,மற்றும் மண்டல் தலைவிகள் ஜோதி,ராதா,நளினி மாவட்டம் மண்டல் நிர்வாகிகள் பிரியா மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

