தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு – 2022ல் கலந்து கொண்ட திமுக துணை பொது செயளாளர் கனிமொழி
கோவை குனியமுத்தூர் பகுதியி்ல் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு – 2022ல் கலந்து கொண்ட திமுக துணை பொது செயளாளர் கனிமொழி,
கோவை குனியமுத்தூர் பகுதியி்ல் உள்ள
ஸ்ரீ கிருஷ்ணா பொறியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு – 2022 எனும் தலைப்பில் இன்று நடைபெற்றது. ஐ சி டி அகாடமி எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையம் சார்பாக நடத்தப்பட்ட இந்த இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாட்டில் இளைஞர்களின் தொடர் சொற்பொழிவு போட்டிகளின் இறுதி சுற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.ஜேனட் போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும், தலைமை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர், பேராசிரியர் மற்றும் மாணவ மாணவியர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவளங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய
எஸ்.மலர்விழி இந்த நிகழ்வை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது இளைஞர்கள் எவ்வாறு தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ஆதித்யா சிறப்புரையாற்றினார். ஐசிடி அகாடமியின் தலைமை செயல் அலுவலர் பாலசந்தர் மாநாட்டின் முதன்மை உரை குறித்து சிறப்புரையாற்றினார். காக்னிசன்ட் நிறுவனத்தின் அரசு தொடர்பான மாநில மென்பொருள் சேவை துறையின் தலைவர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். இந்த இளைஞர் தலைமை பண்பு மாநாட்டின் தலைமை விருந்தினராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.