அரசு பேருந்து ரத்து.. மாணவ மாணவியர்கள் அவதி… போராட்டம் நடத்த போவதாக பொது மக்கள் அறிவிப்பு..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தடம் எண் 32 இறச்சகுளம் முதல் சாமி தோப்பு வரை இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்தில் நாகர்கோவில், கோட்டார், மற்றும் அந்த வழி தடத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் மற்றும் அலுவுலக பணிக்காக செல்லும் பொது மக்களுக்கு வசதிக்காக காலை 8 15 க்கு வந்து கொண்டிருந்த ஸ்பெஷல் பேருந்து  திடீர் என்று ரத்து செய்யப்பட்டது .

அதன் காரணமாக பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்குச் செல்ல பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிற்கு திரும்ப செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் நாகர்கோவில் அரசு பேருந்து பொது மேலாளர் அவர்களை பலமுறை சந்தித்து நேரில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவும் இன்னும் இரு தினங்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபட போவதாக இறச்சகுளம் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *