சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார்.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி பழைய சாரம் வடக்கு வீதி மற்றும் மாரியம்மன் கோயில் வீதிமுழுவதும் தார் சாலை அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர்
ஜான்குமார் ரூபாய் 12 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நகராட்சி ஆணையர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.