(அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் முன்னால் இராணுவத்தினரின் கூட்டமைப்பு) சார்பில் ஷாக்கி போட்டி நடைபெற்றது
நீலகிரி மாவட்டத்தில்
H.T. குமார் (Retd.DSO NILGIRIS) அவர்களிடம் இலவசமாக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இடையேயான ஷாக்கி போட்டி. Jai Jawan Jai Cordite (அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் முன்னால் இராணுவத்தினரின் கூட்டமைப்பு) சார்பில் ஷாக்கி போட்டி நடைபெற்றது. இதில் 78 மாணவர்கள் பங்கு பெற்றனர்.
இந்த மாணவர்களை ஏழு குழுக்களாக பிரித்து போட்டிகள் நடைபெற்றது. குழுக்களின் பெயர்கள் இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் விளையாடிய வீரர்களின் பெயரைக் கொண்டு அமைக்கப்பட்டது.(அணியின் பெயர்கள்
Dhanraj Pillaiஅணி
Dhyan Chand அணி
Bhaskaranஅணி
Dilip tirkyஅணி
VJ Philipஅணி
Tirumalvalavanஅணி
Adamஅணி)
இது மாணவர்களே ஊக்கப்படுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதற்கு CFA பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக சீனிவாசன்,DSC பிரமோத், துரைசாமி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள், Medal, வெற்றிக்கான கோப்பைகளை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மாணவர்களுக்கு இலவசமாக ஹாக்கி பயிற்சி அளித்து வரும் H.T. குமார் (Retd.DSO NILGIRIS) அவர்களுக்கு Jai Jawan Jai Cordite அமைப்பின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதில் முதல் இடத்தில்
Bhaskaran அணியும்
இரண்டாம் இடத்தில் Adamஅணியும் கோப்பையை வென்றனர்