அம்பத்தூரில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு வரும் 10 ம் தேதி தொழிற்பழகுநர் முகாம்
அம்பத்தூரில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு வரும் 10 ம் தேதி தொழிற்பழகுநர் முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு தொழிற்பழகுநர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூரில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 10-ந் தேதி பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுனர் முகாமை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகின்றது.
இம்முகாமில் தகுதியுடைய ஐடிஐ தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்று பயனடையுமாறும்,மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ள திருவள்ளூரில் உள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9499 055663, 94442 24363 மற்றும் 94441 39373 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.