கோவை டி.ஐ.ஜி , காவல் நிலையத்தில் ஆய்வு..!

Loading

ஈரோடு அக்டோபர்
கோவை சரக டி.ஐ.ஜி. முனைவர் எம்.எஸ்.முத்துசாமி அவர்கள் பவானி மற்றும் ஆப்பகூடல் நிலையங்களை ஆய்வு செய்தார். இவ்விரு காவல் நிலையங்களின் அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார்.
மேற்படி இரண்டு காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளரான .எம்.கிருஷ்ணமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர்கள் ரகுநாதன், அசோகன், மகேஷ்வரி, கோவிந்தராஜன், கெஜலட்சுமி மற்றும் இதர காவல் ஆளிநர்கள் அனைவரின் குடும்ப நலனை பற்றி விசாரித்து குறைகளையும் கேட்டறிந்தார்.

அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள் பராமரிப்பு மற்றும் வழக்குகளின் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து வெகுவாக பாராட்டினார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்தால் எவருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தார்.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனக் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.சசிமோகன், இ.கா.ப. மற்றும் பவானி காவல் உட்கோட்ட டி.எஸ்.பி. செல்வி.அமிர்தவர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.
Attachments area

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *