சென்னை பர்மா பஜாரில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி வாடகை உயர்த்தியதை கண்டித்து பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது
சென்னை பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில் கடைகளின் வாடகையை உயர்த்தியதை கண்டித்தும், முன்பு இருந்த வாடகையே தொடர வேண்டும் என வலியுறுத்தியும் பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கத்தின் சார்பாக கடைகளை அடைத்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அமீர் ஹம்சா தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனம் ஈர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பேட்டியளித்த அளித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அமீர் ஹம்சா
பர்மாவில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்காக அன்றைய முதல்வர் பக்தவச்சலம் இந்த இடத்தை அளித்ததாகவும் எங்களின் பொருட்செலவில் நாங்களே இந்த கடைகளை கட்டியதாக கூறினார்.
பாத்ரூம் அளவுள்ள கடைகளுக்கு சென்னை
மாநகராட்சி இருமடங்காக கடை வாடகையை அதிகப்படுத்தி இருப்பதை கண்டிப்பதாகவும்
வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து விடுவோம் என அச்சுறுத்தி வருவதாக கூறினார்.மேலும்
கடந்த 2017 ஆண்டு வரை 443 ரூபாய் வாடகை கட்டணம் இருந்த நிலையில் தற்போது 1133 ரூபாய் உயர்த்தி கேட்கிறார்கள்…
கொரோனாவில் இருந்து தற்போது தான் மீண்டு வரும் நிலையில் வாடகை உயர்வால் வணிகர்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகும் என கூறினார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் தெரிவித்ததாகவும்…
அவரே அதிகாரியிடம் தங்கள் முன்னிலையில் தொடர்புகொண்டு பேசியபோதும் அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்கவில்லை என்றும் இது எங்களுக்கு மன வேதனையும் வருத்தத்தையும் அளிப்பதாக கூறினார்.அதேபோல் அன்று சென்னை மேயராக இருந்த தளபதி அவர்கள் தலையிட்டு 275 ரூபாய் வாடகை கட்டணம் விதித்திருந்தார். இப்போது தமிழக முதல்வராக ஆக இருக்கும் அவர் இந்த பிரச்சனையில் தலையிட்டு அதே வாடகை கட்டணத்தை நிர்ணயம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால் வியாபாரிகளின் சார்பாக மிக பெரிய போராட்டம் வரும் காலங்களில் நடத்தப்படும் என கூறினார்.