வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் சி.எம்.ஆரின் வெர்சியஸ் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையை தமிழக அரசின் சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் சி.எம்.ஆரின் வெர்சியஸ் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையை தமிழக அரசின் சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
குறைந்த அளவு ஊடுருவக்கூடிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையை வழங்குவதன் மூலம், பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சென்னையின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றாகிய சென்னை – வடபழனி, சிம்ஸ் மருத்துவமனை வெர்சியஸ் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையைத் தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிய சிகிச்சை முறையைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் இந்தப் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறை மருத்துவக் குழுவினருக்கும் நோயாளிகளுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும். அதிக செலவில்லாத, கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் தொடங்கி, குறைந்த வலி – அதிகம் ஊடுருவாத தன்மை, தழும்புகள் மற்றும் ரத்த இழப்பும் குறைவு, நோயாளிகள் விரைவாக குணமடையும் வசதி, குறைந்த நாள் மருத்துவமனையில் தங்குதல் போன்ற நன்மைகளின் மூலம் அவர்களுடைய வழக்கமான வேலைகளை மீண்டும் தொடங்க பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகளைவிட இந்தப் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறை உள்ளது. என்று கூறினார்
இவ்விழாவின்போது எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து
இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் பட்டா ராதாகிருஷ்ணன்
மற்றும் தியாகராய நகர் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்..