புரட்டாசி மாத தேர் திருவிழா நேற்று முன்தினம்  துவங்கியது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத தேர் திருவிழா நேற்று முன்தினம்  துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் கும்ப பூஜை கோமங்கள் நடைபெறுகிறது.முதல் நாளன்று  கொடிமர மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. இரவு புதூர் ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் மன்றமும்  இளைஞர் நற்பணி மன்றமும் ஊர் பொதுமக்களும் இணைந்து நடத்திய மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 5500 க்கும் மேற்பட்ட விளக்குகளுடன் பூஜை வழிபாடு நடைபெற்றது. புதூர் சந்திப்பில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு வரையிலும் புதூர் சந்திப்பில் இருந்து மணக்குடி சந்திப்பு வரையிலும் இரண்டு கீலோமீட்டர் தூரம் இந்த விளக்கு பூஜை நடைப்பெற்றது. சாலையின் இரு புறமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையை சிவா மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் சிவகுமார் துவக்கி வைத்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி வரும் 5 ம் தேதி காலை நடைபெறுகிறது. இந்த திருவிளக்கு பூஜை காண்போரை பரவசமடைய செய்தது. பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த திருவிளக்கு பூஜையை பார்த்துச் சென்றனர் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த திருவிளக்கு பூஜையை காண மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்….
0Shares

Leave a Reply