மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (28.9.2022)அன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன்.
இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன். HCL நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் திருமதி ஸ்ரீமதி சிவசங்கர், சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், திருச்செந்தூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் டாக்டர் கி. செந்தில்ராஜ், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைவர்