லசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Loading

இந்தியாவில் சாமுண்டீஸ்வரி கோவில் தசரா திருவிழாவிற்க்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலையில் கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து குலசை முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.
இன்றைய தினம் வேடமணிந்து வருபவர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குடிநீர், கழிப்பிடம், வாகனம் நிறுத்தும் இடம் அரசு சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளத. 700 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

0Shares

Leave a Reply