சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஆண்டு விழா*

Loading

சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஆண்டு விழா*

புனித வின்சென்ட் தே பவுல் சபை சிவகங்கை மத்திய சபைக்கு உட்பட்ட சூசையப்பர்பட்டணம் வட்டார சபையைச் சார்ந்த காளையார்கோவில் புனித அருளானந்தர் கிளைச் சபையின் 29 ஆவது ஆண்டு விழா கோவில் வளாக அரங்கில் நடைபெற்றது. ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை சூசை ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். சிவகங்கை மத்திய சபையின் தலைவர் சூசைராஜ், செயலாளர் பெர்னாட்ஷா, பொருளாளர் அமிர்தசாமி முன்னிலை வகித்தனர். கிளைத் தலைவர் லூர்துராஜ் அனைவரையும் வரவேற்றார். சபையின் கூட்ட அறிக்கையை கிளைச் செயலாளர் ஆரோக்கியசாமி வாசித்து ஒப்புதல் பெற்றார். சபையின் வரவு செலவு அறிக்கையை கிளை பொருளாளர் கஸ்பார் வாசித்து ஒப்புதல் பெற்றார். வட்டார சபை தலைவர் அருள் சபை கையேட்டை வாசித்து விளக்கம் அளித்தார். விழாவில் பல்வேறு பள்ளியில் பயிலும் 28 மாணவ மாணவிகளுக்கு தலா ரூபாய் 1000 வீதம் ரூபாய் 28000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. தொழிற்கல்விக்கான கல்வி உதவித் தொகையாக ரூபாய் 5000 ஒரு மாணவருக்கு வழங்கப்பட்டது. மூன்று நபர்களுக்கு திட்டக் கடனாக ரூபாய் 20000 வீதம் ரூபாய் 60000 வழங்கப்பட்டது. 11 தத்து குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசியும் பண உதவியும் புதிய ஆடைகளும் வழங்கப்பட்டன. மேலும் 7 ஏழை குடும்பங்களுக்கு அரிசியும் புதிய ஆடைகளும் கிளைச்சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டது. சபையின் துணை தலைவர் டேனியல் ஜோசப் நலத்திட்ட உதவிகளை தொகுத்து வழங்கினார். உதவி பங்குத்தந்தை, வட்டாரத் தலைவர் அருள், வட்டாரச் செயலாளர் அருள்தாஸ் வாழ்த்துரை வழங்கினார்கள். ஐந்துகாயம் ஆசிரியர் நன்றி கூறினார். உறுப்பினர்கள், துணை உறுப்பினர், உபகாரிகள், பெற்றோர்கள், பயனாளிகள், மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *