வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் தமிழக கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம்.
வேலூர் செப்டம்பர் 26
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்தமிழககல்விக்கொள்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் வடக்கு மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் பேராசிரியை பெ.அமுதா தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் டி.முனிசாமி வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர்செ.நா.ஜனார்த்தனன் கே.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.வடக்கு மண்டலஒருங்கிணைப்பாளர் எல்.நாராயணசாமி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் முனைவர் என்.மாதவன்தமிழககல்விக்கொள்கை இடம்பெற வேண்டிய பாடங்கள் குறித்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி தேசிய கல்விகொள்கை 2020 குறித்து விளக்கி பேசினார்.