தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனு தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய நிர்வாகிகள் வாழ்த்து

Loading

தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனு தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி திமுக 15வது கட்சி தேர்தல் முழுமையாக நிறைவு பெற்று இறுதி கட்டமாக மாவட்ட செயலாளர் தேர்தல் விருப்ப மனு 22ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.

தற்போது மாவட்ட பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், விருப்ப மனு தலைமை கழக நிர்வாகிகளிடம் அளித்துள்ளார்.

இதனையடுத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பி;ள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் சென்னை பொதிகை இல்லத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவடட பிரதிநிதி சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிழக்கு ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *