கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு
![]()
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு காவல்துறையினர் இந்த செயலில் ஈடுபட்டு மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகம் காந்திபுரம் சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ளது. நேற்று இரவு 8:30 மணி அளவில் அங்கு வந்த சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை வீசியுள்ளனர். இந்த பாட்டில் கீழே விழுந்தது ஆனால் அதிர்ஷ்ட வசமாக வெடித்து சிதறவில்லை அதற்குள் சமூக விரோதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். பெட்ரோல் குண்டும் கைப்பற்றப்பட்டதது. இந்த குண்டு வீசிய நபர்கள் யார் என்பதை கண்டறிய அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கட்சியை ஆதாரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தப்பட்ட நிலையில் பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு இடத்திலும் ஒப்பணக்கார வீதி மாருதி துணிக் கடை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது இதனால் கோவையில் பரபரப்பான சூழல் நிலவிவருகின்றது.

