படப்பிடிப்பை நிறைவு செய்த கவின்-அபர்ணா தாஸ்

Loading

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் கவின். நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயனாக மாறினார். இவர் தற்போது டாடா என்ற படத்தின் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை கணேஷ் பாபு இயக்கி வருகிறார். மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் ‘டாடா’ படத்தில் இடம்பெற்ற மகனே என் கண்மணி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டாடா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

0Shares

Leave a Reply