வேலூர் தமிழக முதல்வர் சாப்ட் டென்னிஸ் வீராங்கனைக்கு ஊக்கத்தொகை .
வேலூர்
வேலூர் மாநகர் கலாஸ் அத்தி மர தெருவில் வசிக்கும் மனோகர் பாபு அவர்களின் மூத்த மகள் ராகஸ்ரீ சாப்ட் டென்னிஸ் விளையாட்டில் டெல்லியில் விளையாடிய போது தங்கம் வென்றார் இதற்காக வீராங்கனைக்கு ஊக்கத்தொகை சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தேசிய போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற வேலூர் லட்சுமி கார்டன் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ராகஸ்ரீ, வீராங்கனைக்கு உயறிய ஊக்கத்தொகையாக ரூ. 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி. கே. சேகர்பாபு, சிவ. வி. மெய்ய நாதன், மேயர் ஆர். பிரியா, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளனர்.