மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (12.9.2022)நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (12.9.2022)நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற 19 வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதினையும், அதற்கான ஊக்கத்தொகையாக 16 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கி வாழ்த்தினார். இந்த விழாவில். மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் திரு. அசோக் சிகாமணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர்  கார்த்திகேயன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply