விடுமுறை நாளில் ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் – நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
ராமேசுவரம், அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று சனி கிழமை விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் ஞாயிற்று கிழமையான இன்றும் பக்தர்கள் அதிகமாக இருந்தது. இன்று சாமியை தரிசனம் செய்வதற்காக உலக அளவில் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.