யானை வருவதை அறிய அலாரம் கருவியை வைத்த விவசாயி கைது.
யானை வருவதை அறிய அலாரம் கருவியை வைத்த விவசாயி கைது.
கிராம மக்கள் வனச்சரக அலுவலகத்தில் போராட்டம்.
பேரணாம்பட்டு அடுத்த சேரங்கல் மலையடி கிராமத்தைச் சேர்ந்த யானை துரைசாமி மகன் மோகன் பாபு (40) இவரது நிலம் ஆந்திர வனப்பகுதியின் எல்லை ஓரம் உள்ளது .இந்த கிராமத்திற்குள் யானைகள் அடிக்கடி வருவதாலும் பெரும் பயிர் சேதங்கள் ஏற்படுவதாலும் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு யானைகள் வந்தால் ஒலி எழுப்பும் அலாரம் கருவியை இவர் தனது நிலத்தில் பொருத்தினார்.
இக்கருவி 12 வோல்ட்டு திறன் கொண்டது. குழந்தை கூட இந்த கம்பியை கையில் பிடித்தாலும் ஆபத்து இல்லை .இந்த கருவி பொருத்திய பின்பு கிராம மக்களுக்கு நிம்மதி கிடைத்தது .உயிர் பயமும் அகன்றது. யானை வரும் போது இவரது பட்டா நிலத்தில் ஆறடி உயரத்தில் உள்ள அலாரம் கம்பி இணைப்பில் யானை உடல் பட்டவுடன் அலாரம் கருவி ஒலிக்க துவங்கிவிடும். எந்த பகுதியில் யானை உள்ளது என்பதையும் அறிய முடியும். இதனால் இந்த அலாரம் ஒலி கேட்டதும் கிராம மக்கள் மோகன் பாபு வீட்டுக்கு வந்து பாணங்கள், பட்டாசுகளை கொளுத்தி போட்டு யானைகளை விரட்டி வந்தார்கள். சுருங்கச் சொன்னால் சுமார் ரூ1500 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் அலாரம் கருவி கிராம மக்களின் உயிருக்கே பாதுகாப்பாய் இருந்தது. யானைகள் நடமாடத்தின் போது இங்கு வரும் வனத்துறையினர் மோகன் பாபு நிலத்திலேயே உயிருக்கு பயந்து தங்கி வந்துள்ளார்கள். இந்த கருவி குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வனச்சரங்கர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருவி இயங்கும் முறையை பார்த்து சென்றுள்ளார்கள். மேலும் வனத்துறையினரும் இதுகுறித்து பாராட்டி சென்றுள்ளனர். நள்ளிரவில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு கேட்கும் இந்த அலாரத்தால் மக்கள் நிம்மதியாக யானை பயமின்றி இருந்தனர். யானைக் கூட்டத்தினால் பயிர்கள் அழிக்கப்பட்டு கடனாளி ஆனார். ஒருநாள் யானை ஒன்று இவரை மிதித்தே கொன்றது இந்த வேதனையும் தேவையும் தான் மோகன் பாபு இந்த கருவியை அமைப்பது பற்றி யோசிக்க வைத்தது .உயிருக்கும் பயம் இல்லாமல் மற்றவர்களுக்கும் ஒலி எழுப்பி எச்சரிக்கை விடும் இந்த அலாரத்தை வடிவமைத்தார். இக்கருவி குறித்து பத்திரிகை ஊடகங்களிலும் செயல் விளக்கம் வந்துள்ளன.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இதே கிராமத்தில் விவசாயி வேணுமூர்த்தி என்பவர் நிலத்தில் சுமார் 4 வயது சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது .இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்து மூன்று நாட்களுக்கு மேலான சிறுத்தையின் உடல் அதே இடத்தில் கால்நடை மருத்துவத்துறையினரால் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது .அப்போது நிருபரிடம் கூறிய மாவட்ட வன அதிகாரி (பொறுப்பு) நாகசத்தீஷ்கிடி ஜாலான் சிறுத்தை இறந்து மூன்று நாட்களுக்கு மேலாகிறது. சிறுத்தை மின் வேலியில் சிக்கி இறக்கவில்லை.உடலில் காயங்களாலும் இறக்கவில்லை. வயிறு காலியாக உள்ளது .எனவே அது விஷப் பொருட்களை உண்டதனாலும் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை. முழுமையான ஆய்வு அறிக்கை சில தினங்களில் கிடைத்துவிடும் எனவே இப்போது அதைப்பற்றி கூற இயலாது என கூறினார்.
இந்நிலையில் 28ஆம் தேதி மாலை அலாரத்தை எடுத்து வந்து வனச்சரங்க அலுவலகத்தில் வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்திட வருமாறு மோகன் பாபுவை வனத்துறையினர் பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். தகவல் அறிந்து நிருபர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது அலுவலகத்தின் வெளியே கேட் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் கொண்டு வரப்பட்ட அலாரம் கருவியை பார்க்கவும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. எதற்காக அழழைத்துவரப்பட்டார் என்ற தகவலும் பத்திரிகையாளர்களுக்கு கூற மறுத்து விட்டனர்.மாலையில் மோகன் பாபுவுடன் வனச்சர் வேனில் கருவியுடன் வேகமாக கிளம்பி சென்று விட்டார். அவர் கைது செய்யப்பட்டாரா எதற்கு கைது செய்யப்பட்டார் என்ற காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை
இந்நிலையில் மோகன் பாபு குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் வனச்சரக அலுவலகத்தில் கூடி மோகன் பாபு கைது செய்ய காரணம் என்ன என்று கேட்டனர் .அதற்கு வனச்சரகர் அலுவலகத்திற்கு இன்று வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்து விவசாயிகள் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட கருவியை போன்ற மற்றொரு கருவியை கொண்டுவரப்பட்டு மோகன் பாபு நண்பர் செந்தில் மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ஒரு குழந்தை அந்த அலாரம் பேட்டரி கம்பியை வாயில் வைத்துக் கொண்டது எதுவும் ஆபத்து இல்லாமல் இருந்தது பெண்களும் ஈர கைகளால் அந்த கம்பியை பிடித்தனர். எதுவும் ஆகவில்லை மாலை வரை மக்கள் கலையாமல் அமர்ந்து இருந்தனர் சிறுத்தை இறப்புக்கான காரணம் இந்த அலாரம் தான் என நீதிமன்றத்தின் மூலம் அறியப்பட்டது.
இறந்திருக்கும் என்ற சந்தேகத்தின் பெயரில் மோகன் பாபு அவருடைய தம்பியின் மீதும் வழக்கு பதிந்துள்ளதாகவும் தற்போது மோகன் பாபு கைது செய்ய ப்பட்டதாக க்கூறப்பட்டது.
சிறுத்தை ஒன்று இறந்ததற்காக அதன் காரணத்தை அறியும் முன்பே தங்கள் விசாரணையை எளிமையாக்கிக்கொள்ள இந்த வழக்கை வனத்துறையினர் போட்டு உள்ளார்கள். ஏழு ஆண்டுகளாய் கருவியை பார்த்து பாராட்டிய வனத்துறைக்கு இன்று எப்படி இந்த திடீர் ஞானம் ஏற்பட்டது . இறந்த யானையை புதைக்கும் போதும் இறந்த மானை எரிக்கும் போதும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கும் வனத்துறை இந்த சிறுத்தையை எரித்த போது ஏன் அனுமதிக்கவில்லை. கேஸை முடிக்க அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக வனத்துறை அதிகாரிகள் செயல்பாடு உள்ளதாக கிராம மக்கள் பேசுகின்றனர்.
விவசாயிகளின் துயரத்திற்கு விடிவு கண்ட கிராமத்து விஞ்ஞானிமோகன் பாபு கரங்களுக்கு பரிசு கோப்பை தருவதற்கு பதிலாக அதிகாரிகள் காப்பை தந்துள்ளார்கள் என்பது வேதனை அளிக்கிறது.