1.5 கிலோ கஞ்சா பறிமுதல்..! கேரள வாலிபருடன் இருவர் கைது.!

Loading

1.5 கிலோ கஞ்சா பறிமுதல்..! கேரள வாலிபருடன் இருவர் கைது.!

 ஈரோடு, ஆக. 25:
 ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கிய போலீசார் அவர்களிடம் இருந்து 1.5 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர் .
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நல்லி மருத்துவமனை சாலையில் நேற்று முன்தினம் மதுவிலக்கு போலீஸ் எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து, அவர்களது பைக்கை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த பழனிசாமி மகன் சக்திகுமார்(30), கேரளா மாநிலம் வயநாடு சேதாலியத்தை சேர்ந்த நாரயணன் மகன் சதீஷ்(34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும், அவர்களிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்து, ஈரோடு வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, ஈரோடு வடக்கு போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கார்த்தி என்ற பட்டாசு கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *