சூர்யா ஜோடியாகிறார் திஷா பதானி

Loading

பாலிவுட் நடிகையான திஷா பதானி, முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். திஷா பதானி, இந்தியில் டோனி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அங்கு முன்னணி நடிகையாக உள்ளார். பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை காதலித்து வருகிறார். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இவர்தான் டான்ஸ் ஆடுவதாக இருந்தது. சம்பளம் அதிகமாக கேட்டதால் இவரை படக்குழு தேர்வு செய்யவில்லை.

இவருக்கு பதிலாக சமந்தா அந்த பாடலில் நடித்தார். இந்நிலையில் இப்போது முதன்முறையாக தமிழ் சினிமாவில் திஷா பதானி அறிமுகமாக உள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 22ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கான பூஜையும் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க தேர்வாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இதற்கு முன் சிறுத்தை சிவா இயக்கிய படங்களுக்கு வித்யாசாகர், இமான், அனிருத் இசையமைத்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அந்த படத்துக்கு பிறகு இப்போது இந்த படத்தில்தான் அவர் சிவாவுடன் மீண்டும் இணைய உள்ளார். சூர்யா நடிப்பில் மாயாவி, ஆறு, சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்போது 5வது முறையாக அவர் சூர்யாவுடன் இணைகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *