ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு லதா ஓவிய கலைக்கூடம் மாணவர்கள் தேசிய அளவில் விருது பெற்று சாதனை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு லதா ஓவிய கலைக்கூடம் மாணவர்கள் தேசிய அளவில் விருது பெற்று சாதனை. ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடம் சென்னை தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் மற்றும் கஸ்தூரி சீனிவாசன் டிரஸ்ட் கோயம்புத்தூர் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் விழா 2021_22 மற்றும் 18 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் லதா ஓவியக் கலைக்கூடம் மாணவர்கள் கலந்து கொண்டு ஓவியர்கள் பிரிவில் பணக்கோட்டி முதல் பரிசாக தேசிய விருதையும், பொற்கிழியும், கேடயமும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
மாணவர்கள் பிரிவில் விக்னேஷ் முதல் பரிசும் திருமுருகன் இரண்டாம் பரிசும் சான்றிதழ், கேடயமும், பொற்கிழியும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட ஓவியர்களும், 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிறவிருதுகள் தேர்வு பெற்றனர்.
விழாவில் டாக்டர். பி. கே. கிருஷ்ணராஜ் வானவராயர், பல்கலைக்கழக தேர்வாளர் டாக்டர். எம். சக்திவேல், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். சௌமியா அவர்களும், கஸ்தூரி சீனிவாசா அறக்கட்டளை நிறுவனர் சரத்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 21 மாநில ஓவிய கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் மேலும் பல்கலைக்கழக வித்தகர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடம் இயக்குனர் டாக்டர். தர்மலிங்கம் நன்றியுரை தெரிவித்தார். இதில் பரிசு பெற்ற லதா ஓவியக் கலைக்கூடம் ஓவிய ஆசிரியர்கள் சங்கம் மற்றும் மாணவர்கள் சார்பாக டாக்டர். தர்மலிங்கம் ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடம் நிறுவனர் மற்றும் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.