காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பு

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் அமைந்துள்ள விஐடி  பல்கலைக்கழகத்தில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன், தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர்ஆர்.என். ரவி, கலந்து கொண்டு 8.168 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது இந்தியா அமெரிக்கா நட்புறவு நீண்ட வரலாறு கொண்டது இரண்டு நாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. தற்போது ஒரு நாடு சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறது உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் உலக அமைதிக்கு இந்த இரு நாடுகளின் பங்கு மிக முக்கியம் மாணவர்கள் வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து வெற்றி பெற முடியாது தோல்விகளை எதிர்கொள்ள வேண்டும் புதிய சிந்தனைகளை ஏற்படுத்த வேண்டும் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் சிந்தியுங்கள் இன்னும் 25 ஆண்டுகளுக்கு  இந்தியா 100 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் போது நாட்டின் வளர்ச்சிக்கு உங்களுடைய பங்களிப்பு அதிகம் தேவையானதாக இருக்கும் இந்தியாவில்  400தொழிற்சாலைகள் இருந்தன தற்போது 80 ஆயிரம் தொழிற்சாலைகளாக உயர்ந்துள்ளது.
வரும் காலத்தில் மேலும் அதிகரிப்பது உங்கள் கையில் உள்ளது . கொரோனா பாதிப்பின் போது 200 கோடி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு  இந்தியா வழங்கியது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக பங்களிப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக அமெரிக்க தேசிய அறிவியலமைப்பு இயக்குனர் டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன், இந்திய அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் ஸ்ரீ வாரி சந்திரசேகர், சென்னை கானா அமெரிக்க நாட்டின் துணை தூதர் ஜூடித் ராவின், விஐடி பல்கலைக்கழகத்தின் துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், ஜி.வி செல்வம், உதவித் துணை தலைவர் காதம்பரி விஸ்வநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply