ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய பொன்னியின் செல்வன்

Loading

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் “பொன்னி நதி” அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply