பென்னாகரம் 30,கிலோ குட்கா கடத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் மதுப்பாட்டில்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் பருவதனஹள்ளி பிரிவு சாலையில் காவல்துறையினர் ஈடுப்பட்டிருந்தபோது அப்போது பென்னாகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது சோதனையில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது .
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரனை மேற்க் கொண்டதில் குட்கா கடத்தி வந்தவர் நல்லம்பள்ளி அருகே உள்ள பண்டஹள்ளியை சேர்ந்த தேவராஜ் மகன் மயில்முருகன் என்பது தெரிய வந்தது பட்டதாரியான மயில்முருகனை கைது செய்த தனிப்படையினர் அவரிடம் இருந்து 30,கிலோ குட்கா போதை பொருளையும் கடத்தலுக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிளையும் காழல்துறையினர் பறிமுதல் செய்தனர் இந்த சம்பவம் பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.