கோவிலுக்கு வரி செலுத்தக்கூடாது என ஒரு குடும்பத்தை சிலர் ஒதுக்கி வைப்பு….. கோவில் ஆடி விஷேசத்தில் பரபரப்பு…… போலீசார் முன்னிலையில் நடந்த தீபாராதனை

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ளது உச்சி மாகாளி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் செவ்வாய்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷங்கள் நடப்பது வழக்கம்.

இந்தக் கோவிலில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வரி செலுத்தி திருவிழாக்கள் மற்றும் விசேஷங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்  நடந்த கோவில் விசேஷத்தில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் வரி வாங்காமல் அவரை ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து அவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் முன்னிலையில் கோவில் விசேஷங்கள் மற்றும் தீபாரதனைகள் நடந்த சம்பவத்தால் இப்போது பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முருகேசன் கூறும் போது ” கோவிலில் பல்வேறு முறையீடுகள் நடந்ததை தட்டி கேட்ட காரணத்தால் தன்னை ஒதுக்கி வைத்து வரி வாங்காமல் புறக்கணித்துள்ளனர் இது மனித உரிமைக்கு மீறிய செயல், ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பலர் சேர்ந்து தன்னை ஒதுக்கி வைத்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

0Shares

Leave a Reply