ரூ.4 கோடி சம்பளம் கேட்கும் ராஷ்மிகா

Loading

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் எடுத்து பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது சம்பளத்தை ராஷ்மிகா உயர்த்தி உள்ளார்.

ஏற்கனவே புஷ்பா படத்தில் நடிக்க ரூ.1 கோடி வாங்கிய அவர் தற்போது புஷ்பா 2-ம் பாகத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொகையை படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ராஷ்மிகா இந்தி படங்களில் நடிப்பதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

0Shares

Leave a Reply