கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மேலும் ஒரு வாலிபர் பலி… விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது….
![]()
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் சபிக். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை ஊழியர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.8 பேரும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த சசிதரன், சுப்பையா ஆகிய இருவர் பலியானார்கள். மீதமுள்ள 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிவிளையை சேர்ந்த பிரவீன் (வயது 25) என்பவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கியாஸ் சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது..

