தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி  வாரியத்தின் வாயிலாக 26 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோட்ட அலுவலக கட்டடம் வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகம் துணைக்கோள் நகர கோட்ட அலுவலக கட்டடம் மற்றும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ் குமார் மக்வானா மதுரை மற்றும் வேலூரிலிருந்து காணொளி காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply