கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :-  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட  மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக வருகிற 4-ந் தேதி வரை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது . கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே அதிக  கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராகி உள்ளது. இதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள 8 தீயணைப்பு நிலையங்களிலும் அதில் பணி புரியும் காவலர் மற்றும் வாகனங்கள்  தயார் நிலையில்  நிற்குமாறு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.  மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தீயணைப்பு வீரர்கள் பரிசோதித்து பார்த்து தயாராக வைத்து இருக்கிறார்கள்.

0Shares

Leave a Reply