ஈரோட்டில் தாய்ப்பால் வார விழா-விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தல் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி, உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து விழிப்புனர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு முதல் வாரம் (1 முதல் 7 வரை) உலக தாய்ப்பால் வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் குழந்தையின் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முதல் 1000 நாட்களில் (கர்ப்பகால பராமரிப்பு 270 நாட்கள்+ தாய்ப்பால் ஊட்டுதல் 180 நாட்கள் + குழந்தை பிறந்து 6 மாதம் முதல் 2 வருடம் வரை 550 நாட்கள்) வழங்கப்படும் ஊட்டச்சத்து அடித்தளமாகும்.
எனவே முறையான கர்ப்பகால பராமரிப்புடன் குழந்தை பிறந்து 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் (சீம்பால்) கொடுக்க வேண்டும், குழந்தையின் முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், 6 மாதம் முடிந்தவுடன் இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் கூடுதலாக இணை உணவும் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை கர்ப்பிணிகள் பற்றும் பாலூட்டும் தாய்பார்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது.குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் கரக்கும் பால் சீம்பால் குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து. இதில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு, கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது.
குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கிறது. சீம்பாவில் உள்ள வெள்ளை அணுக்கள் வயிற்று போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய் தொற்றுக்களை தடுக்கின்றன. ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேளர்டும். தனர்ணீர் கூட கொடுக்க கூடாது. குழந்தைக்கு தேயையான தண்ணீர் தாய்ப்பாலில் உள்ளது.தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகள் கூர்ந்த அறிவுத்திறன் வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் உள்ளனர்.
உடல் பருமன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை பிற்காலத்தில் வருவதைத் தடுக்கிறது. பிரசவத்திற்கு பின்வரும் இரத்த கசிவு போன்ற ஆபத்தை குறைக்கிறது. தாய்ப்பால் மட்டும் புகட்டும் காலத்தில் அடுத்த கர்ப்பம் தரிப்பதை தடுக்கிறது. குழந்தைக்கும் தாய்க்கும் ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.
மாவட்ட பூட்சித்தலைவர் அவர்கள் ஊட்டச்சத்து வழிப்புணர்வு கண்காட்சியினை
திறந்து வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சி அரங்கினில் கர்ப்பிணிப் பெண்கள்,வளர்இளம்பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துஅடங்கிய
காய்கறிகள்,பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து 10 கர்ப்பிணி
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்ததுண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
மேலும் உலக தாய்ப்பால் வார விழா 2022 விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து தொடங்கப்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழு உறுப்பினர்கள் மற்றும் நந்தா நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கெண்டனர். இதனை தொடந்து வட்டார அளவில் 15 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் தோறும் நேரடியாகவும் மற்றும் வாட்ஸ்ஆப் செயலி மூலமும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பேரணியில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்) பூங்கோதை, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நல அலுவலர் சண்முகவடிவு, ஏகம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஜெகன்ராஜ், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், திண்டல் ரோட்டரி சங்க தலைவர், நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் நந்தா நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கெண்டனர்.