தமிழக அரசின் ஓராண்டு சாதனையை ஒட்டி கோவை மாவட்டம் மயிலேறிபாளையத்தில் ரேக்ளா பந்தயம் – 300 க்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்பு.
தமிழக அரசின் ஓராண்டு சாதனையை ஒட்டி கோவை கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மேற்கு ஒன்றிய மயிலேரிபாளையம் ஊராட்சி மற்றும் ரேக்ளா சங்கம் இணைந்து ரேக்ளா போட்டி கோவை மாவட்டம் மலேரிபாளையத்தில் நடைபெற்றது.
இந்த ரேக்ளா போட்டியை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மலேரிபாளையம் ஊராட்சி தலைவர் கோமதி, திமுக செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ரேக்ளா பந்தயத்தில் கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஈரோடு, காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட காளை மாடுகள் கலந்துகொண்டன. இதில் வெற்றி பெற்ற காளை மாடுகளுக்கு வெற்றி பரிசாக ஒரு சவரன் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்த ரேக்ளா பந்தய துவக்கு விழா நிகழ்ச்சியில்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.