“தீரன் சின்னமலை” சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !
ஈரோடு ஜூலை 22
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு வழங்கினர் மனுவில் தெரிவித்துள்ளதாவது…..
ஈரோடு மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளில் காலிங்கராயன் வாய்க்காலில் அதிக அளவு சாயக் கழிவு நீர் கலப்பதால் விவசாயமும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாமல் மாசடைந்து வருகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதனை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகள் பாதிக்கப்படா வண்ணம் போர்க்கால நடவடிக்கையாக கட்டுப்படுத்த வேண்டும்.
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட கொங்கு நாட்டின் மாவீரன் தீரன் சின்னமலையின் முழு உருவ சிலையை ஈரோட்டில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்…
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்..
ஈரோடு மாநகரில் பல வட மாநிலத்தவரின் சிலைகள் இருக்கும் நிலையில் சுதந்திர போராட்ட தியாகி பல சமுதாயத்தினரையும் ஒன்று திரட்டி ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலையின் சிலை ஈரோடு மாநகரில் எங்கும் இல்லை..
இதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஈரோடு ரிங் ரோடு பகுதியில் தீரன் சின்னமலையின் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி 17 வயது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நடந்த வன்முறை ஏற்புடையது அல்ல என்றும் 4000 பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் கல்வித்துறை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் வானவில் தெரிவித்துள்ளனர் மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளனர்.