கர்மவீரா் காமராஜர் 120வது பிறந்தநாள் விழா
![]()
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அப்பாசாமி தெருவில் சென்னை மேல்நிலை பள்ளியில் கர்மவீரா் காமராஜர் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா வருகைதந்து கர்மவீரா் காமராஜர் திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனையடுத்து சென்னை ராயபுரம் வார்டு49ல் பெருநகர சென்னை மாநகராட்சி,நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக
எனது குப்பை,எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தபட்டது.
ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா பரிசு பொருட்கள் வழங்கினார்.
எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவர்கள்,தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநராட்சியின் பணியாளர்கள், சூப்பர்வைசர்,கன்சர்வன்சி இன்ஸ்பெக்டர்,அனிமேட்டர் சூப்பர்வைசர்,அனிமேட்டர்ஸ் ஆகியோர் விழிப்புணர்வில் கலந்துகொண்டனர்.

