தமிழக அரசுக்கு ஆதரவு தாருங்கள் கவர்னருக்கு அமைச்சர் திடீர் கோரிக்கை

Loading

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆளுநருக்குல உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் நலன் கருதி இந்த மாதத்துக்குள்‌ வெளியிட வேண்டும் என்றும்,
தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்த அவர், தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் தமிழகத்தில் கலந்தாய்விற்கான தேதிகளில் மாற்றம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறினார்.

மேலும், புதிய கல்விக்கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் முருகன் கூறுவதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் நிலை புதிய கல்வி கொள்கையில் உள்ளதாகவும், எனவே தான் இரு மொழி கொள்கை போதும் என்று கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

நீட் தேர்விற்கான சட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் பரிசீலனையில் உள்ளதாக கூறுவது புதிய செய்தியாக உள்ளதாக கூறிய அவர்,
இதுகுறித்து முதலமைச்சர் விசாரிப்பார் என்றும் கூறினார்

மாநில அரசு கொண்டுவரவுள்ள கல்வி கொள்கையை ஆளுநர் ஆதரிக்கவேண்டும் என கேட்டுகொண்ட அவர்,இன ,மொழி ரீதியாக எவ்வித வேறுபாடு இல்லாமல் இருப்பது தான் திராவிட மாடல் என்று முதலமைச்சர் சொல்வதாகவும், மதவாதத்தை தூண்டக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தமிழில் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்துவரா இணை அமைச்சர் முருகன் என்று அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *