நயன்தாராவின் 75-வது படம்

Loading

நயன்தாராவின் 75-வது படம் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நயன்தாரா 2003-ல் மலையாள படத்தில் அறிமுகமாகி 2005-ல் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்து 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார். நிறைய இளம் கதாநாயகிகள் வந்தும் அவரது மார்க்கெட் சரியவில்லை.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களும் அமைந்தன. கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த அறம் படம் வரவேற்பை பெற்றது. தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி இந்திக்கும் போய் உள்ளார். மேலும் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படமும் கைவசம் உள்ளன. சமீபத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதுவரை 74 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது நயன்தாராவுக்கு 75-வது படம்.

0Shares

Leave a Reply