கோவை மாநகராட்சி காந்திபுரம் சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளி மற்றும் வடகோவை மேல்நிலைப்பள்ளிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்
கோவை மாநகராட்சி காந்திபுரம் சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளி மற்றும் வடகோவை மேல்நிலைப்பள்ளிகளில்
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்
*எனது குப்பை- எனது பொறுப்பு*
*மக்கும் குப்பை மக்காத குப்பை*
என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மாணவியர்களுடன் தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஆசிரியைர்கள் உடன் கோவை மாநகராட்சி ஆணையாளர், வணக்கத்துக்குரிய மேயர், துணைமேயர், மத்திய மண்டலத் தலைவர், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
அதை தொடர்ந்து மாணவ மாணவியரின் விழிப்புணர்வு பேரணி காந்திபுரம் சித்தாப்புதூர் வி.கே.கே.மேனன் சாலையில் நடைபெற்றது.
அதன் பின்னர் கோவை 100அடி சாலை ஜி.பி.சிக்னல் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திலும் மற்றும் அருகே உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் கோவை குறுக்கு வெட்டு சாலை வடகோவை மேம்பாலம் அருகே உள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்
தூய்மைக்கான மக்கள் இயக்கம்
*எனது குப்பை- எனது பொறுப்பு*
*மக்கும் குப்பை மக்காத குப்பை*
என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி குழந்தைகளின் *மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள்* பற்றிய விழிப்புணர்வு பாடலுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் தொடங்கிவைத்தார்கள். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு. பெ.மாரிச்செல்வன், பணிக்குழு தலைவர் திருமதி.சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.பிரபா ரவீந்திரன், திருமதி.வித்யா, நகர்நல அலுவலர் மரு.பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி நகர்நல அலுவலர் மரு.ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சந்திரன், திரு.முருகன், திரு.ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.