இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்
குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தையை திறமையாக முடிப்பீர்கள். வேலையிடங்களில் அன்பைக் காட்டி அனுகூலத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். தொழில் துறையில் இருந்த போட்டிகளை விலக்குவீர்கள்.

ரிஷபம்
பணியிடத்தில் உங்களுக்கு எதிரிகள் முளைப்பார்கள். கடுமையாக வேலை செய்தாலும் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவது கடினம். ஆன்லைன் வர்த்தகங்கள் ஆபத்தை உண்டாக்கும். சூதாட்டத்தின் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். வசீகரமான பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். எளிய முறையில் நடந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

மிதுனம்
வெளியூர்ப் பயணங்கள் அவ்வளவு அனுகூலமாக அமையாது. தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அடுத்தவருடைய பேச்சை நம்பி அகலக் கால் வைக்காதீர்கள். கடுமையான முயற்சிக்குப் பின்பே அரசாங்க காரியங்கள் பயனளிக்கும். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய உதவி தாமதப்படும். பிள்ளைகளால் மனக் கவலை உண்டாகும்.

கடகம்
தொழில் படுமுன்னேற்றமாகக் காணப்படும். பண வரவு தாராளமாக இருக்கும். உறவுகளில் இருந்த உரசல்களைச் சரி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக பணத்தைச் சேமிப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்

சிம்மம்
கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். தொழிலுக்கு எதிராக தோன்றிய போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிறு வியாபாரிகள் அதிகமான பலனைப் பெறுவார்கள். அரசாங்க வேலைகள் அனுகூலமாக நடக்கும். கடன் சுமை குறையும்.

கன்னி
உங்கள் சொல்லுக்கு வீட்டில் மரியாதை கிடைக்கும். பொதுநல சேவையால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்பு தேடி வரும். தனியார் துறையில் சம்பள உயர்வு கிடைக்கும். முதலாளிகளின் அணுக்கமான அன்பை பெறுவீர்கள். போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையும். பங்குச் சந்தை வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

துலாம்
நல்லதையே செய்தாலும் கெட்ட பெயர் வருமுங்க. வேண்டிய நபருக்கு நீங்கள் உதவி செய்வீர்கள். ஆனால், அது வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்காது. கடன் பத்திரங்களில் கையெழுத்துடும்போது நன்றாக படித்துப் பாருங்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் இழுபறியாக இருக்கும்.

விருச்சிகம்
கொடுத்து வைத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் விவகாரம் வந்து சேரும். கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கச்சிதமாக பேசுங்கள். ஆடம்பரமாகச் செலவு செய்யாதீர்கள். தேவையில்லாமல் பண விரயம் உண்டாகும். வியாபாரம் மந்த நிலையிலேயே நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்க தாமதமாகி சிரமத்தை ஏற்படுத்தும்.

தனுசு
தொட்டதெல்லாம் துலங்கும் நாள் இது. விட்ட பணத்தை வியாபாரத்தில் மீட்டெடுப்பீர்கள். கூட்டாகத் தொழில் செய்ய ஒப்பந்தம் போடுவீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். தொழில்துறைகள் மிக முன்னேற்றமாக நடக்கும். அரசு ஊழியர்கள் பணியிடத்தில் அனுகூலம் அடைவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி நிம்மதி ஏற்படும்.

மகரம்
தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமையை வெளிப்படுத்துவார்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்காக அடித்தளம் அமைப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். வியாபாரம் மிகச் சிறப்பாக நடக்கும். வீடு கட்டும் தொழிலில் பொறியியலாளர்கள் புதிய சாதனை படைப்பார்கள்.

கும்பம்
தந்தையின் ஆலோசனையால் புதிய தொழில் தொடங்குவீர்கள். உறவினர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். சுப காரியங்களுக்கான முன்னேற்பாடுகள் செய்வீர்கள். பிரிந்து போன உறவுகளை சேர்த்து வைக்க பெரும் முயற்சி செய்வீர்கள். நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்து பாராட்டுப் பெறுவீர்கள். ஊழியர்கள் அக்கறையுடன் வேலை செய்து பாராட்டுப் பெறுவார்கள்.

மீனம்
அவசரமான காரியமாக இருந்தால் வெளியூர் செல்லலாம். இல்லையெனில் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. திமிராகப் பேசி வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். பிள்ளைகளின் பேச்சை காது கொடுத்து கேளுங்கள். அலுவல் சுமையால் உடல் சோர்வு உண்டாகும். சந்திராஷ்டம நாள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *