வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Loading

சென்னை, இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. இதில் வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது.

இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ..8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 7 ஆம் தேதி 1015.50 ஆகவும், கடந்த மே 19ஆம் தேதி ரூ.1018.50 ஆகவும் இருந்த வீட்டு உபயோக கேஸ் கேஸ் சிலிண்டர் விலை இன்று மேலும் 50 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply