சென்னை ராயபுரம் N1 போக்குவரத்து காவலர்கள் ஒலி மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜூலை 3ந்தேதி வரை ஒலி மாசு பாடு குறித்த விழிப்புணர்வு கடைபிடிக்கபடுகிறது.
இதில் சென்னை ராயபுரம் N1 போக்குவரத்து காவல் நிலையம் அருகே போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவா தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு ஒலி மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
இதில் சென்னை ராயபுரம் வள்ளல் எட்டியப்பா நாயக்கர் பள்ளி மாணவர்கள் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டோன்ட் ஹான்கிங் என்ற எழுத்துகளை பொறித்த பதாதைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் போக்குவரத்து காவல்துறையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாகன ஓட்டிகள் தேவையற்று அதிக ஒலி எழுப்புவதால் ஏற்படும் விளைவுகள்,ஒலி மாசுபாடு குறித்தும்,ஒலி மாசுபாட்டினால் சாலை விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும் எனவும்,அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து,
வாகன ஓட்டுநர்களுக்கு ராயபுரம் போக்குவரத்து காவலர்கள் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளுக்கு டோன்ட் ஹான்கிங் என்ற ஸ்டிக்கர்களை வாகனத்தில் ஒட்டபட்டும்.வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு கையொப்பங்கள் மற்றும் ஒலி எழுப்பாமை உறுதிமொழி எடுக்கபட்டது.
ஒலி மாசுபாடு குறித்த விழிப்புணர்வு முகாமில் சென்னை ராயபுரம் N1 போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஒலி மாசுபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.