சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
வெந்து தணிந்தது காடு, ஏ.ஆர்.ரகுமான், சிம்பு, AR Rahman , vendhu thaninthadhu kaadu, simbuகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ‘வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையும் படியுங்கள்: மீனா கணவர் மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சரத்குமார், பிரபுதேவா இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என வீடியோ பதிவின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.