பூதான இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு
ஈரோடு ஜூன் இருபத்தி ஒன்பது பூதான இயக்கத்தின் கீழ் கடந்த 1964இல் ஆறு ஏழைகளுக்கு வழங்க பட்ட இடத்தை சிலர் பொய்யாக பத்திரங்கள் தயாரித்து தங்கள் பெயரி பதிவு செய்து கொண்டனர் என்று குற்றம்சாட்டி அகில இந்திய நாடார்கள் வாழ்வுரிமை சங்கம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது போராட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் மாநில தலைவர் சதா நாடார்கூறியதாவது சத்தியமங்கலம் வட்டம் வரதம் பாளையம் கிராமத்தில் 6 பேருக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் தரிசு நிலம் பூதான இயக்கத்தின் கீழ் அரசால் வழங்கப்பட்டது அவர்கள் அந்த நிலத்தின் மானாவரி பயிர் சாகுபடி செய்து வந்தனர்.
ஆனால் சமீபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அவர்களுக்கு தெரியாமல் அந்த நிலத்தை தங்கள் பெயரில் கிரையம் செய்துள்ளனர் இதற்கு கிராம நிர்வாக அதிகாரி பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் சேர்ந்த சில அதிகாரிகள் துணை போயுள்ளனர் இது சம்பந்தமாக பலமுறை சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழைகள் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது உடனடியாக மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்